சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் ஒருவர் ரூபா. 20,000,000/- (இருபது மில்லியன் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு 2018 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, காசோலைகள் மூலம் வாடகை செலுத்தும்போது தாமதமின்றி தொடர்புடைய காசோலைகளை வழங்குவதாக உறுதியளித்த பின்னர், 07 சந்தர்ப்பங்களில் காசோலை மூலம் 20 மில்லியன் இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில், சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் ஒருவர் 2026.03.04 அன்று பிற்பகல் 1.15 மணியளவில் சுகாதார அமைச்சின் உணவகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்பு 2026 மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு


