விலங்குணவுக்காக சோளம் இறக்குமதி தொடர்பாக முறையான பொறிமுறையைத் தயாரித்தல்

விலங்குணவுக்காக சோளம் இறக்குமதி தொடர்பாக முறையான பொறிமுறையைத் தயாரித்தல்
  • :
விலங்குணவு மற்றும் திரிபோசா உற்பத்தி மற்றும் மனிதப் பயன்பாடு போன்றவற்றுக்கு சோளம் பயன்படுத்தப்படுவதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் போதியளவாக இன்மையால், சோளம் இறக்குமதி செய்வதற்கு நேரிடுகின்றது. ஆயினும், கடந்த காலங்களில் அதுதொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ளமையால், சோளம் இறக்குமதி செய்வதற்காக முறையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென 2025.12.15 மற்றும் 2025.12.22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, தொடர்ந்து வரும் காலங்களில் உள்நாட்டு சோளத்தின் விலை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் தீர்மானிப்பதற்கும், உள்நாட்டு சோளத்தின் அறுவடை சந்தைக்குக் கிடைக்காத காலங்களில் உள்நாட்டு சோள உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விலங்குணவு உணவுற்பத்தியாளர்கள் மற்றும் விலங்குணவு இறக்குமதியாளர்கள் மூலம் விலங்குணவு உற்பத்திக்குத் தேவையானதும், உள்நாட்டில் விநியோகிக்க முடியாததுமான அளவை மாத்திரம், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இறக்குமதி செய்வதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles