சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
  • :

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்று முன்தினம் (06.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்; சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(i) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

(ii) வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

(iii) அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

(iஎ) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இற்கிடையிலான ஒப்பந்தம்
(எ) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இற்கிடையிலான ஒப்பந்தம்

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]