சீன ஊடக குழுமம் (China Media Group) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இருதரப்புடனும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப் பாட்டிற்கு ஏற்ப சீன ஊடக குழுமத்தின் தொழில்நுட்ப மற்றும் விசேட அறிவைப் பயன்படுத்தி இலங்கைக்கு சீன சுற்றுலா பயணிகளை அதிகமாக வரவழைப்பதற்கும், இலங்கையை முன்னணி சுற்றுலாத் தலமாக உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.