'Clean Sri Lanka' தேசிய திட்டத்தின் கீழ் இரத்மலானை பிரதேச செயலகத்தின் கடற்கரை சுத்தம் செய்யும் முன்னோடித் திட்டம் கடந்த 9 ஆம் திகதி மூன்று இடங்களில் நடைபெற்றதாக கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்திட்டம், ஓபர்ன் சைடில் இருந்து கல்கிஸ்ஸ ஹோட்டல் வரை, இரத்மலானை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸ்ஸ ஹோட்டல் வரை மற்றும் இரத்மலானை ரயில் நிலையத்திலிருந்து தெவடகஹ வீதி வரையிலான இடங்களை மையமாகக் கொண்டுள்ளது
இத்திட்டம் இரத்மலானை மற்றும் தெஹிவளை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க, மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார மற்றும் இரத்மலானை பிரதேச செயலாளர் ஹிமாலி கருணாரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.