இதன்படி, காலி கடவத் சதர பிரதேச செயலகம் மற்றும் போபே பொத்தல பிரதேச செயலகப் பகுதிகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மேலதிக மாவட்ட செயலாளர் நிலம் மற்றும் அபிவிருத்தி சுமித் சாந்த தலைமையில் காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தென் மாகாண அலுவலகத்தின் உதவிப் பதிவாளர் நாயகம் துலானி எச். கீர்த்திசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் மாவட்ட முன்னோடித் திட்டம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம, கடுவெல, மஹரகம, கெஸ்பேவ, தெஹிவல, கொழும்பு, சீதாவக்கை ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.