இலங்கை சுங்கம், 2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்துள்ளது.

இலங்கை சுங்கம், 2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்துள்ளது.
  • :
 
2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
மேலும், 2025 செப்டெம்பர் 30ஆம் திகதியில் இலங்கை சுங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் ரூ.1485 பில்லியன் என்றும், ரூ.1737 பில்லியனை வருமானமாகப் பெற முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் கணிசமானளவு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
 
இதற்கு அமைய 2025 ஒக்டோபர் 14ஆம் திகதியாகும்போது வாகன இறுக்குமதியால் அதிக வருமானமாக ரூ.587.11 பில்லியன் கிடைத்திருப்பதாகவும், இது ஒட்டுமொத்த வருமானத்தில் 37% என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய ஒக்டோபர் 14ஆம் திகதியாகும்போது 55,447 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக ரூ.472.26 பில்லியன் சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது.
 
7331 சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியின் மூலம் ரூ.48.67 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
142,524 மோட்டார் சைக்கிள் இறக்குமதியின் ஊடாக ரூ.30.3 பில்லியனும், 15,035 முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியின் ஊடாக ரூ.15.10 பில்லியனும் வருமானமாக கிடைத்துள்ளது.
1679 பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் வான் ரக வாகன இறக்குமதியின் ஊடாக ரூ.12.66 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

Related Articles