இலங்கை சுங்கத்தின் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு புதிய டிஜிட்டல் கட்டமைப்பை (E-Tendering system) அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமானதாக இருக்கும் என குழு சுட்டிக்காட்டியது.


