இலங்கை - ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் கடற்படை விஜயத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டது

இலங்கை - ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் கடற்படை விஜயத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டது
  • :

ஜப்பானில் நடைபெறும் ஜப்பான் - இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கும் இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் 18 மார்ச் அன்று முக்கிய சந்திப்புகளை மேட்கொண்டது.

இலங்கை தூதுக்குழு டோக்கியோவின் இச்சிகாயா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்துக்குள் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தை (NIDS) பார்வையிட வியம் செய்தது. பாதுகாப்பு, மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்நிறுவனம், அதன் நிபுணர் குழுவின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றின் முடிவுகளை ஆங்கிலம் மற்றும் ஜப்பான் மொழிகளில் பல்வேறு தளங்களில் வெளியிடுகிறது.

இந்த விஜயத்தின் போது, தூதுக்குழு NIDS தலைவர் திரு. IMAKYUREI Manabu வை சந்தித்தது. அங்கு , நிறுவனத்தின் வரலாறு மற்றும் பங்கு குறித்த விரிவான விளக்கமும், ஜப்பானின் வளர்ந்து வரும் பாதுகாப்பு சூழல் குறித்த ஒரு மேலோட்ட அறிக்கையும் வழங்கப்பட்டது. பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜப்பான் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் MIYAZAKI Masahisa மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விஜயத்தின் ஒரு பகுதியாக, தூதுக்குழு ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான JS Maya (DDG-179) கப்பலையும் பார்வையிட்டது. இந்த விஜயத்தில் ஜப்பான் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், கடற்படை கிழக்கு படையணி பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் GOKA Yoshihiro மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதுவரும் கலந்து கொண்டனர்.

கப்பல் விஜயத்தின் போது, கொழும்பு துறைமுக வருகைகள், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) ஒத்துழைப்பு, மற்றும் கடற்படை போர்த் தந்திரங்களில் இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், பரந்த கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பும் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஜப்பான் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் கடற்படை தளபதிக்கும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இது இரு நாடுகளுக்கிடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles