இலங்கை கடற்படை கெடட் அதிகாரி பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் அதிகாரமளிக்கும் விழாவில் Sword of Honour விருதை பெற்றார்

இலங்கை கடற்படை கெடட் அதிகாரி பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் அதிகாரமளிக்கும் விழாவில் Sword of Honour விருதை பெற்றார்
  • :

இலங்கை கடற்படையின் Midshipman டி.எம்.ஐ. விமுக்தி தென்னகோன் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் (PNA) 122 வது Midshipman மற்றும் 30 வது குறுகிய சேவை உள்வாங்கல் (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்றார்.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் ஜாகிர் அஹமட் பாபர் சித்து பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

குருநாகல் புனித அன்னாள் கல்லூரியின் பழைய மாணவரான Midshipman தென்னகோனின் இச்சாதனை பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் வரலாற்றில் ஒரு சாதனையாக கருதலாம்.

1970 இல் நிறுவப்பட்ட பாகிஸ்தான் கடற்படை கலாசாலை அந்நாட்டில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவ பயிற்சி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Midshipman தென்னகோனுக்கு பாதுகாப்பு அமைச்சு அதன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]