இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நேற்று (ஜனவரி 03) யாழ்ப்பாணம், வேலணை நான்காம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இச்சுற்றிவளைப்பின் போது இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டாத 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சுற்றிவளைப்பின் போது, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பின்வருமாறு.
1. அனுக்ரோன் - 2900 போத்தல்கள்
2. லியோகெம் - 2248 போத்தல்கள்
3. ரொக்கெட் – 29175 பொதிகள்
4. பிரிஷன் – 29109 பொதிகள்
இக்குற்றதுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினர் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.