இலங்கை மன்றக் கல்லூரி அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், குறிக்கோள்களைத் தயாரிக்கும்,  அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும்

இலங்கை மன்றக் கல்லூரி அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், குறிக்கோள்களைத் தயாரிக்கும்,  அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும்
  • :

இலங்கை மன்றக் கல்லூரி அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், குறிக்கோள்களைத் தயாரிக்கும்,  அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன  ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

கௌரவமான இலங்கை அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், நோக்கு, குறிக்கோள்கள் என்பவற்றுக்கு வழிகாட்டும், அறிவார்ந்த வளத்தை உருவாக்குகின்ற, அரசியல்வாதிகளுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்குகின்ற நிறுவனமாக இலங்கை மன்றக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்காக மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தில்  கலந்து கொண்டு, கல்லூரியின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் கீழ் தற்போது செயற்படும் இலங்கை மன்றக் கல்லூரி இன்று இலங்கையின் முன்னணி வயது வந்தோர் கல்வி மற்றும் பயிற்சி மத்திய நிலையமாக செயற்படுகின்றது.

இந்நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவையும் பார்வையிட்ட அமைச்சர், இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் நிறுவனத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து, கேட்டறிந்து கொண்டார். 

ஆராய்ச்சி, அறிவுசார் கலந்துரையாடல்களை கல்லூரி தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கை மன்றக் கல்லூரியில் பணியாற்றும் சகல உத்தியோகத்தர்களும் அரசாங்கத்தின் போக்குகளுக்கு வழிகாட்டி, தீர்மானங்களை மேற்கொள்ளும் பிரதான முக்கியமான பிரஜைகள் மற்றும் அதிகாரிகளாக  உருவாக வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

அரசாங்கத்தின் எதிர்கால குறிக்கோள்களை அடையாளம் கண்டு செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், அதற்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய இலங்கை அரசைக் கட்டியெழுப்பும் அடிப்படையைத் தயாரிக்கும் பொறுப்பு புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
அந்தப் பொறுப்பை மிகத் துல்லியமாகவும், பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தமது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேரமும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 

அவ்வாறு முழுநேர அர்ப்பணிப்பில் தற்போது புதிய அமைச்சரவைக்கு பல்வேறு  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், குற்றச்சாட்டுகளுடன் அமைச்சர்கள் சந்தித்துக் கொள்ள முடியாது. தொலைபேசிக்கும் வருவதில்லை ஊடக அறிக்கைகளையும் வெளியிடுவதில்லை. நேர்முகக் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றுவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருப்பதாக நினைவுபடுத்தினார்.

என்ன குற்றங்கள் முன்வைக்கப்பட்டாலும் அமைச்சரவை அயராது முழு நேரத்தையும் அர்ப்பணிப்பு செய்து, இலங்கை அரசுக்கு சிறந்த அத்திவாரத்தை உருவாக்குகின்ற பணியை எவ்வித குறைபாடுகளும் இன்றி மேற்கொள்வதற்கு  அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தான் பொறுப்புடன் சுட்டிக்காட்டுகின்றேன்.

இந்த விதத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படாது, சரியான ஆராய்ச்சிகள் இன்றிய தரவு, தகவல்களின் அடிப்படையில் அன்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக இருத்தல் அல்லது அதிகாரத்தில் தான் தோன்றித்தனமாக தீர்மானங்களை செயற்படுத்தியமையினால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அந்த நிலைமை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் விவரித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரி எவ்வளவு திட்டங்களை தயாரித்து உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகள், கல்வி என வழங்கினாலும், அந்த செயற்பாட்டிற்காக பாரிய நிதி செலவிடப்பட்டாலும், பாரம்பரியத்திலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்குள் செயற்படுவதற்கும் சுயாதீனமாக சரியானதை மேற்கொள்வதற்கு ஏற்ற பலமான கொள்கையுடையவர்களாக இல்லாமைக்கு நாட்டின் அரச அதிகாரிகள் கூட பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சர்  சுட்டிக்காட்டினார். 

அவ்வாறே நாடொன்றிற்கு முன்னேறி செல்வதற்கு முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படும் அரசாங்கம், அமைச்சர்கள் தமக்கு நினைத்த விதமாக செயல்படுவதற்கு வாய்ப்பளிக்காது திட்டமொன்றைப் பின்பற்றி, முன்னோக்கிச் செல்வதற்கு வழிகாட்டலை வழங்கும் பொறுப்புடன், அதற்கான குறிக்கோள்களை தயாரிப்பதற்குப் பொருத்தமான நிறுவனம் இலங்கை மன்றக் கல்லூரியே என அமைச்சர் வலியுறுத்தினார்.  

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் எஸ். எம். சமன் சமரக்கோன், பணிப்பாளர் நாயகம் ரித்மா குணசேகர மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]