இலங்கை தேசிய முன்கூட்டிய நடவடிக்கை வழிக்காட்டி 2026-2030 பாதுகாப்புச் செயலாளரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
இலங்கையில் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் காலநிலைத் தாங்குதிறனை முன்கூட்டிய நடவடிக்கைகள் மூலம் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கை தேசிய முன்கூட்டிய நடவடிக்கை வழிக்காட்டி 2026-2030” (Sri Lanka National Anticipatory Action Roadmap 2026–2030) இன்று (04 ஜூன்) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம கலந்துக் கலந்துக் கொண்ட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவுக்கு (ஓய்வு), அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) ஆயத்தநிலை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சதுர லியனாராச்சி வழிக்காட்டியின் முதல் பிரதியை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
நிகழ்வில் பிரதான உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், எதிர்வரக்கூடிய அனர்த்தங்களுக்கு துரிதமான மற்றும் பயனுள்ள பதிலளிப்பை உறுதிப்படுத்த “முன்கூட்டிய எச்சரிக்கை – முன்கூட்டிய நடவடிக்கை” என்ற கொள்கையை நிறுவனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அண்மையில் ஏற்பட்ட கடுமையான வானிலை அனர்த்தத்தின் போது பெறப்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்த அவர், அறிவியல் அடிப்படையிலான முன்னறிவிப்புகளைப் பயன்படுத்தி அபாயங்கள் ஏற்படுவதற்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவின் (ஓய்வு) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த வழிக்காட்டி, அறிவியல் முன்னறிவிப்புகளை சமூக மட்டத்தில் அனர்த்த ஆயத்தநிலை மற்றும் பதிலளிப்பு செயன்முறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கான விரிவான கட்டமைப்பை வழங்குகிறது.
இம்முயற்சிக்கு உலக உணவுத் திட்டத்தின் (WFP) வலுவான ஆதரவு கிடைத்துள்ளதுடன், அதன் இலங்கை பணிப்பாளரும் பிரதிநிதியுமான திரு. Philip Ward, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் தாங்குதிறனை மேம்படுத்தவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கூட்டு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்பு அமைச்சு, நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் (NBRO), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), வேர்ல்ட் விஷன் லங்கா மற்றும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிரேஷ்ட கலந்துக் கலந்துக் கொண்டனர்.


