இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதில் ரஷ்யாவின் ஒத்துழைப்பு - பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதில் ரஷ்யாவின் ஒத்துழைப்பு - பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்
  • :

ரஷ்யாவின் புரிதல் மற்றும் உதவியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், குறிப்பாக 30 ஆண்டுகால உள்நாட்டு மோதலின் போதும், இயற்கை பேரழிவுகளின் போது நிதி உதவி உட்பட, ரஷ்யாவினால் இலங்கைக்கு வழங்கப்பட மனிதாபிமான உதவிகள் விலைமதிப்பற்றது.

நமது இரு நாடுகளும் பரஸ்பர புரிதல், நட்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கண்ணோட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நீண்டகால கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.

கொழும்பில் புதன்கிழமை (பெப்ரவரி 19) நடந்த ரஷ்ய "Defender of the Fatherland Day " நிகழ்வில் உரையாற்றும் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இவ்வாறு கூறினார்.

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வளர்ந்து வரும் உறவை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், பொருளாதார, தொழில்நுட்ப, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் முக்கியமான இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷ்யாவின் நிலையான ஆதரவையும் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற துறைகளில் நீண்டகால கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியா அவர், 1957 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இரு நாடுகளும் தொடர்ந்து நல்லுறவு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையை நினைவுபடுத்தினார். இரு நாடுகளும் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன, ரஷ்யா இலங்கை மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் தொடர்பிழும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதி அமைச்சரை ரஷ்ய தூதுவர் அதிமேதாகும் லெவன் எஸ். ஸர்கர்யன் வரவேற்றார். பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இந் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு நேற்று மாலை கொழும்பு Galle Face Hotelல் நடைபெற்றது.

ரஷ்யாவில் வருடாந்தம் பெப்ரவரி 23 திகதி Defender of the Fatherland Day கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சு சிரேஷ்ட அதிகாரிகள், முன்னாள் தளபதிகள், இராஜதந்திரிக்ஸ்ல், ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]