இந்நாட்டின் இளைஞர்களுடன் இணைந்து, ஒரு புதிய ஊடக வடிவத்திற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் - இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேக
இந்நாட்டு இளைஞர்களுடன் இணைந்து புதிய ஊடக வடிவத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், நாட்டின் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாகவும் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணவாக்கள் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நேற்று (22) நடைபெற்ற சீன ஊடகக் குழுமத்தின் சிங்கள சேவையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு நாணய வரைபட வடிவமைப்பு வழங்கும் நிகழ்வில் பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு