மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்திரை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) காலை 5.30 மணிக்கு வெளியிட்ட காலநிலை எதிர்வகூறல் தொடர்பான அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
கிழக்கு, மற்றும் உவா மகாணங்களிலும் ஹம்மாந்தோட்டை மற்றும் பொலன்னாறுவை மாவட்டங்களிலும் மாலை வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சபரகமுவ, உவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை இதனால் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றின் காரணமாக மற்றும் மின்னல் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு அவதானமாக செயல்படுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.