கிராம மக்களின் சுகாதார நிலையை முன்னேற்றும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சுவ உதான நடமாடும் மருத்துவ கிளினிக் திட்டத்தின் தொடரில் மற்றும் ஒரு திட்டம் அண்மையில் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர பிரதேச செயலகப் பிரிவில் களுபோவிடியான தேயிலைத் தொழிற் சங்கத்திற்குச் சொந்தமான தேரங்கல அரச தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு இணைந்ததாக தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் வழிகாட்டலின் கீழ் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனமான களுபோவிடியான தேயிலைத் தொழிற்சாலை சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த “சுவ உதான” நடமாடும் வைத்திய சேவை இரு நாட்கள் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கான அனுசரணையை சிஐசி உரக் கம்பனி வழங்கியிருந்தது.