ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கிறார்.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த பல முக்கிய விவாதங்கள் அங்கு நடைபெறும்.
ஐக்கிய இராச்சியத்திற்கான பாராளுமன்ற துணைச் செயலாளருடனான இருதரப்பு சந்திப்பையும் நடத்திய அமைச்சர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் Volker Turk, பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் Varsen Aghabekian, சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் Varsen Aghabekian, மற்றும் பல தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகள் மீதான இலங்கையின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் உரையாற்றவுள்ளார்.