இந்த வருட இறுதிக்குள் 1800 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதே இலக்கு என்ற ‘‘கிராமிய வீதி அபிவிருத்தி தேசிய திட்டத்தை’ இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
‘‘கிராமிய வீதி அபிவிருத்தி தேசிய திட்டத்தின்” கீழ் அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதியில், சீதாவாக பிரதேச செயலாளர் பிரிவில், கொஸ்கம தெற்கு கடுகொட புஸ்ஸெல்ல வீதியின் அபிவிருத்தி வேலைகள் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வீதியின் அபிவிருத்திக்காக அறுபத்தைந்து மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படும். அத்துடன் இணைந்ததாக நாடு முழுவதும் 57 கிராம வீதிகளின் பணிகள் இன்று (2025.06.21) ஆரம்பிக்கப்பட்டன. 14,000 மில்லியன் ரூபாய் திட்டத்தின் மொத்த மதிப்பீடாகும்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் :
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய 5000மில்லியன் ரூபாய் மேலதிக நிதி கிராமிய வீதிகளின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.
இலக்குடைய அபிவிருத்தியினால் மக்களின் வாழ்க்கையை அழகு படுத்துவதற்காக செலவிடப்படும். அவிஸ்ஸாவெல்ல நகர் பூரணமான நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.
பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை நிறுவி, பொது மக்களுக்கு கிடைக்கும் வசதிகளை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமத்தை உருவாக்கும் அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பை குறைவின்றி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.


