வீடொன்று வழங்குவது கட்டிடம் மாத்திரமன்றி வாழ்வதற்கு ஏற்றவாறான குடியிருப்பாக வழங்க வேண்டும் - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்பாட்டினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு நகர நீண்ட கால வாழ் ஜீவனோ பாய ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறுபவர்கள், நிரந்தர வீடு அற்ற பொதுமக்களுக்காக நகர வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை வழங்குவதற்கு அவசியமான திட்டத்தை தயாரித்து விரைவாக நடைமுறைப்படுத்தி வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.


