இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் இராணுவத் தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பெறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றிய விளக்கத்தை பெற ஒரு வாய்ப்பை வழங்கியது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் இராணுவத் தளபதியை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து வரவேற்றனர்.
மேலும், இராணுவத் தளபதி தனது விஜயத்தின் நினைவாக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தின் முன் ஒரு மரக்கன்றை நட்டினார். இதனைத் தொடர்ந்து, கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்ற விரிவான விளக்கவுரையில், பிரதேசத்தில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தற்போதைய பணிகள் மற்றும் செயற்பாட்டு குறித்து தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 ஆம் திகதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். பின்னர், நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.
தனது விஜயத்தின் நிறைவாக இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். இந்நிகழ்வின் நினைவாக தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்ளுடன் இராணுவத் தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் இந்த விஜயம் நிறைவடைந்தது.