பண்டாரவளை, பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று கலந்து கொண்டார்.
பெருந்தோட்டதுறை மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இலங்கை இராணுவத்தின் 11 வது பொறியியல் சேவை படையணி படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவால் இடம்பெயர்ந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். முதல் கட்டத்தில், 10 வீடுகள் கட்டி முடிக்கப்படுவதுடன், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் ஒரு முக்கியமான படியாகும்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.