மொனராகலை நில்கள வனப்பகுதியில் சுமார் 40,000 ஹெட்டெயர் நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி வெளியிடும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன

மொனராகலை நில்கள வனப்பகுதியில் சுமார் 40,000 ஹெட்டெயர் நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி வெளியிடும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன
  • :

2025 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற நில் கலா பனா பகுதியை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நேற்று (03) ரத்துகல ஆதிவாசிகள் மக்கள் பாரம்பரிய மத்திய நிலையத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நில்களா வனப்பகுதியில் உள்ள சுமார் 40,000 நிலப்பரப்பை பாதுகாக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக அமைச்சரினால் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் தானிகல மகா பண்டாரலாகே சுதா வன்னிலா உட்பட பழங்குடி மக்களின் பெரும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றதாகவும் மொனராகலை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles