தேசிய கால்நடை அபிவிருத்தி சபையால் கைவிடப்பட்டிருந்த, கிருமி நீக்கம் செய்யப்பட்ட திரவப் பால் உற்பத்தி மற்றும் விற்பனை, நேற்று (01) நாரஹேன்பிட்டியில் உள்ள கால்நடை அபிவிருத்தி சபையில் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையை கட்டியெழுப்பவும், அதன் சேவைகளை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யவும் தீர்மானித்துள்ளது, அதன் ஒரு கட்டமாக இதனைக் காண முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லீற்றர் திரவப் பால் பக்கெற்றை அறிமுகம் செய்யும் நிகழ்வும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.


