இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அரசியலமைப்பின் பிரிவு 153அ இன் கீழ், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் பின்வரும் நியமனங்களுக்கு பொருத்தமான நபர்களை அரசியலமைப்பு பேரவை, கௌரவ சனாதிபதிக்கு பரிந்துரைக்கும்:
i. பிரதி கணக்காய்வாளர் தலைமையதிபதியாக அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்த கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் ஒய்வு பெற்ற இரண்டு அலுவலர்கள்;
ii. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதி மன்றம் அல்லது இலங்கை மேல் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியொருவர்; அத்துடன்
iii. இலங்கை நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற வகுப்பு I அலுவலர்.
www.parliament.lk எனும் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள்;
அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்
அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
எனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.


