கனமழை தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவித்தல்

கனமழை தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவித்தல்
  • :

IMG 20250119 WA0006

கனமழை தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை 

கிழக்கு, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கானது

அவதான இருக்கவும்!


வடகிழக்கு பருவமழை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. வரையான கனமழை பெய்யக்கூடும், ஏனைய இடங்களில் 75 மி.மீ வரை மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles