கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திரு. பீ.பீ. டர்னி பிரதீப் குமார அவர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நேற்று (06.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பணிப்பாளர் நாயகம் பதவிக்கு சிந்தாந்த ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அறிவுபடைத்த சிரேட்ட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளமையால் உருஹூனுப் பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் மற்றும் சமுத்திரப் பூகோளவியல் கற்கைகள் துறையின் சமுத்திரவியல் தொடர்பான பேராசிரியர் திரு. பீ.பீ. டர்னிபிரதீப் குமார அவர்கள் பொருத்தமானவரெனக் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு (02) ஆண்டுகளுக்கு கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.