கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்தார் 

  • :

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடஇலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025ஜூன் 25அன்று சந்தித்தார். 

இராணுவ மரபுகளின்படி நடைபெற்ற இந்த சந்திப்பின் போதுஇராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளிடையே முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன்மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவ மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், சகோதரப் படைகளுக்கு இடையேயான பிணைப்பு மற்றும்சேவை ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

Related Articles