கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மாகாண கலாச்சாரத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா

கிழக்கு மாகாண ஆளுநர்   தலைமையில் மாகாண கலாச்சாரத் திணைக்களத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா
  • :
கிழக்கு மாகாண சபையின் கலாச்சாரத் திணைக்களத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவானது குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேலூர் மிட்சு மீள்குடியேற்ற கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று (14) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர  தலைமையில் நடைபெற்றது.

 

இந்து கலாச்சார பழக்கவழக்கங்களின் படி மத சடங்குகள் மற்றும் பண்டைய பழக்கவழக்கங்கள் இங்கு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles