கிழக்குக் கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரைக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையின் உதவி

 கிழக்குக் கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரைக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையின் உதவி
  • :

இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் காயமடைந்துள்ளதாக கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், நோய்வாய்ப்பட்ட நோயாளியை தரையிறக்க உதவுவதற்காக கிழக்கு கடலில் பயணம் செய்து கொண்டிருந்த MV SSI Surprise கப்பலை எச்சரித்தது.

அதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை MV SSI Surprise என்ற கப்பலில் ஏற்றிச் சென்று, அடிப்படை முதலுதவி அளித்து, இன்று காலை (2025.06.02.) கரைக்கு அருகில் கொண்டு வரப்பட்ட பின்னர்,கடற்படையின் வேக தாக்குதல் கப்பல் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]