இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நெமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும், இலங்கையில் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயற்படும் கெப்டன் Lisias Kondjeni Kangandjela, 2025 பெப்ரவரி 05 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், நெமீபியா உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும், இதனை நினைவு கூறும் வகையில் இருவர்கடையில் நினைவு பரிசுகள் கைமாற்றிக் கொள்ளப்பட்டது.