கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக, மில்கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளை காப்பீடு செய்யும் திட்டம் தொடர்பாக, மில்கோ நிறுவனத்திற்கும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபைக்கும் இடையே அண்மையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதன்படி, இந்தத் திட்டத்தை பல கட்டங்களாக செயல்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், முதல் சுற்றில், 2000 கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்கப்பட உள்ளளன.
இது தொடர்பாக மே மாத இறுதிக்குள் இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.