வறிய அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் அதுசார்ந்த வறுமையைக் குறைக்கும் நோக்கில் 'உங்களுக்கொரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
அரசின் உதவுதொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகையை பங்ளிப்புச் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற பயனாளிகளின் பொருளாதார நிலைமைக்கு அமைய இயலுமை இன்மையால் தற்போது வீடொன்றுக்கு வழங்கப்படுகின்ற 650,000ஃ- ரூபாவான அரச உதவு தொகையை 1,000,000ஃ- ரூபா வரை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (21.04.2025) நடைபெற்ற அமைச்சரவையில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வறுமை அல்லது குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கி அடையாளங் காணப்பட்ட வீடொன்றை நிர்மாணிப்பதற்காகஃ மேம்படுத்துவதற்காக கட்டுமான முன்னேற்ற அடிப்படையில் உதவு தொகையொன்று வழங்கப்படுகின்றது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளியொருவர் குறைந்தபட்சம் 550 சதுரஅடி வீடொன்றை அமைக்க வேண்டியதுடன் அதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 650,000ஃ- ரூபா உதவுதொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகை குறித்த பயனாளியால் பங்களிப்புச் செய்ய வேண்டும். வேலைத்திட்ட ஆரம்பத்தில் ஒரு வீட்டுக்கான மதிப்புச்செலவு 1,147,000ஃ- ரூபாவாக இருப்பினும் தற்போது குறித்த செலவு 1,764,000ஃ -ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.