ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்துவதற்காக, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்களின் போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பேராதனை, பதுளை, சேலங்கடி வீதி அபிவிருத்தித் தட்டத்தின் மீதமுள்ள நிதியை இதற்காக பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் பணிப்பாளர்; (சட்டம்) திரு. அப்துல் மோசன் ஏ. அல்முத்தலா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம், பேராதனை, பதுளை, சேலங்கடி வீதி அபிவிருத்தித் திட்டத்திலிருந்து மீதமுள்ள நிதியை, வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு மாற்ற எதிர்பார்த்துள்ளதுடன், அந்நிதியை குறிஞ்சாங்கேணி பாலம் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் கட்டுமானம் பல போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி அமைச்சு மேலும் அறிவித்ததுள்ளது.