கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் (Colombo Central Bus Stand) தற்போதைய புனரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் (Colombo Central Bus Stand) தற்போதைய புனரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம்
  • :
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் (Colombo Central Bus Stand) தற்போதைய புனரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வுபெற்ற) நேற்று (02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

 இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

திட்டத்தின் நோக்கம் மற்றும் முன்னேற்றம் மத்திய பஸ் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான வசதியான மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கை விமானப்படையினரால் இந்தப் புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த விஜயத்தின் போது கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்தல், திட்டம் முழுவதும் உயர் தரத்தைப் பேணுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
 
விமானப்படையின் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வஜிர சேனாதீர திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெளிவு படுத்தினார்.
 
“தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டம் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவதன் மூலம் பொதுமக்களின் வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புனரமைப்புப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
 
இந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் போது கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகளவில் அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தினசரி பஸ் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் வசதியை அதிகரிப்பதுடன் நகரின் பொதுப் போக்குவரத்து சேவையின் வினைத்திறனையும் மேம்படுத்தும்வதற்கு வாய்ப்பளிக்கும்.
 
பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்கள் புனரமைப்புப் பணிகளை உன்னிப்பாக அவதானித்த பாதுகாப்புச் செயலாளர் திட்டத்தை உரிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அவர் அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

Related Articles