கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரா அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்

கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரா அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்
  • :

கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரா அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்.

கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் எசல மகா பெரஹரா - 2026 ஐ நடத்துவது குறித்த ஆரம்பக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை எசல நிகழ்வை முன்னிட்டு 63 ஆவது தடவையாக ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை எசல மகா பெரஹரா நடைபெறவுள்ளதுடன், அந்த பெரஹராவை கோலாகலமான முறையில் நடத்துவதற்கு அரச அனுசரனையைப் பெற்றுக்கொள்வது குறித்தும், அது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி இரவு இறுதி மகா பெரஹரா, வாலுகாராம வீதி, காலி வீதி, கொம்பனிதெரு சந்தி ஊடாக லிபெர்ட்டி சுற்றுவட்டாரத்தை கடந்து, ஆர். ஏ. டி மெல் மாவத்தை வழியாக வீதி உலா வந்து விகாரையை வந்தடையவுள்ளது.

பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளிக்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கடந்த காலத்தில் நிலவிய கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாலுகாராம பெரஹராவை நடத்த முடியாமல் போனதாகவும், தற்போது நாட்டில் நிலவும் சுமுகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இம்முறை பெரஹராவை நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும், பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் வாலுகாராமய உள்ளிட்ட ஐந்து மகா விகாரைகளின் விகாராதிபதி, கொழும்பு மற்றும் ஊவா மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய மஹரகம நந்த நாயக்க தேரர் தெரிவித்தார்.

கொம்பனிதெரு வாலுகாராம உள்ளிட்ட இரு விகாரைகளின் விகாரை பொறுப்பாளர்களான, சாஸ்திரபதி உடவெல கோலித தேரர், எல்கடுவ நாபித தேரர், அமுகொட சத்தாலங்கார தேரர், கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியர் உனாபான நந்த விமல தேரர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கொழும்பு உதவி மாவட்ட செயலாளர் என். எஸ். பத்திரண மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினரின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles