கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
  • :
கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோரின் தலைமையில், எரிசக்தி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் அண்மையில் நடைபெற்றது.

 இதன்போது, கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்குதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சொந்தமான காணி உரிமம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிர்மாணப் பணிகள் அல்லது புனரமைப்புப் பணிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Related Articles