மகாவலி கங்கையின் சில நீரேந்து பிரதேசங்களுக்கு நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கில் கிண்ணியா, மூதூர், சேருவில, வெளிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உரித்தான மகாவலி கங்கையினைச் சார்ந்த தாழ்நிலப் பிரதேசங்களுக்கு தற்பொழுது முதல் எதிர்வரும் 24 மணித்தியாலய காலப்பகுதிக்குள் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் ஆற்றல் உள்ளது. மேலும் மட்டக்களப்பு -பொலன்னறுவை வீதி கெல்லேல்ல பிரதேசத்திலும், சோமாவதீ ரஜமகா விகாரையின் நுழைவாயிலும், சோமாவதீ ரஜமகா விகாரையினைச் சுற்றியுள்ள பிரதேசத்திலும் சிறு வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் ஆற்றல் உள்ளதனால் தற்பொழுது முதல் எதிர்வரும் சில தினங்கள் கழியும் வரை சோமாவதீ ரஜமகா விகாரைக்கு பயணிக்கும் வழிபாட்டாளர்களும், அவ்வாறே மேற்படி பிரதேசங்களில் மகாவலி சுங்கைக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் தீவிர கவனத்துடன் இருக்கவும்,
ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.


