மாத்தளை நகரின் மத்தியில் அமைந்துள்ள பிராமண கால்வாயப் பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடைந்து வருவதைப் பாதுகாப்பதற்காக, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சருமான கமகெதர திஸாநாயக்க, அவர்களால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மனித செயற்பாடுகளினால் பிராமண கால்வாய் உள்ளிட்ட பகுதி நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதாகவும், எனவே இப்பிரதேசத்தை பாதுகாக்க முறையான வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும் மாத்தளை பிரதேச செயலாளர் ஹர்ஷ சேனாதீர, சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
குறித்த பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுதல், முறைசாரா கட்டட நிர்மாணங்கள் மற்றும் இந்த காணி பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பயன்படுத்தப்படுவது போன்ற பல விடயங்கள் குறித்து பிரதேச செயலாளர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.