மத்திய கிழக்கில் இடம்பெறுகின்ற யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் எரிசக்தி பாதுகாப்பிற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது

மத்திய கிழக்கில் இடம்பெறுகின்ற யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் எரிசக்தி பாதுகாப்பிற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது
  • :
மத்திய கிழக்கில் இடம்பெறுகின்ற யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் எரிசக்தி பாதுகாப்பிற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதற்கமைய, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள்..

• எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறை நாளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
• குறிப்பாக சுகாதாரம், துறைமுகங்கள், நீர் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய பணிகளைச் செய்ய வேண்டிய நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
 
• பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இந்த நாள் விடுமுறை நாளாகக் கருதப்படும்.
• அனைத்து அரச வைபவங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
• கைத்தொழில், சுகாதாரம், விவசாயம், தோட்டத் தொழில்கள் போன்ற துறைகளுக்குத் தேவையான எரிபொருளைக் கணக்கிட்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி

Related Articles