மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் குவைத் எயார் வேஸ் விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதன்பின்னர் 2026 மார்ச் 02 ஆம் திகதி முதல் விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் போது காணப்பட்ட பாதுகாப்பற்ற நிலையினால் விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க முடியாதிருந்தது.
இந் நிலையினால் 2026 மார்ச் 31 ஆம் திகதி 241 பயணிகளை ஏற்றி வந்த விசேட விமானம் குவைத்திலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் குவைத் விமான நிறுவனம் கொழும்பு வரை தமது விமான சேவையை 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு உத்தியோகபூர்வமாக த் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை மற்றும் குவைத் நாடுகளுக்கு இடையேயான மானத் தொடர்புகளை வலுப்படுத்தி சுற்றுலா சேவையின் அவசியத்தை பூரணப்படுத்துவதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிட்டி உள்ளதாகவும் புதிய விமான சேவை அட்டவணையுடன் குவைத் எயார் வேஸ் விமான நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


