மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது தளபதியாக 2025 பெப்ரவரி 17 ம் திகதியன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு, 23வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் நிகழ்வைக் குறிக்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், குழு படம் எடுத்துகொண்டார்.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினரின் ஒழுக்கம் மற்றும் நன்நடத்தையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், தனது நோக்கங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார். அத்துடன் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்ட்ட அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.
கேட்போர் கூடத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கவுரை நடைபெற்றது. இறுதியாக, தளபதி தனது இறுதி உரையை நிகழ்த்தி, அனைத்து அதிகாரிகளையும் தனது குழுவின் தீவிர உறுப்பினர்களாக இருக்க ஊக்குவித்தார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.