மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும்  ஆரம்ப நிகழ்வு.

மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும்  ஆரம்ப நிகழ்வு.
  • :

அண்மையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.

இந்த வெள்ளப் பேரழிவால் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதார வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையைத் தொடர்ந்து, தித்வா சூறாவளியால் மாவிலாறு அணைக்கட்டில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைத்து, அல்லை–மாவிலாறு விவசாயத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் தொடக்க விழாவும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அண்மையில் (13) அல்லை–மாவிலாறு பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் கலந்து கொண்டு  திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்திற்காக சுமார் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளிலிருந்து அல்லை–மாவிலாறு அண்மித்த பகுதிகளை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த,  கமத்தொழில், பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன்,கந்தளாய் பிரதேச செயலாளர் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles