முன்னாள் அமைச்சர் சமரக்கோன் முதியன்செலாகே சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் சமரக்கோன் முதியன்செலாகே சந்திரசேன கைது
  • :

2014 ஆம் ஆண்டு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், விசேட செயற்திட்ட அமைச்சராகவும் பணியாற்றிய சமரக்கோன் முதியன்செலாகே சந்திரசேன கைது செய்யப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக அரசாங்கத்தால் ரூபாய் 25 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட சோள விதைகளை, 2015 ஜனாதிபதி தேர்தல் இலாப நோக்கத்திற்காக மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது அரசியல் கூட்டாளிகள் மூலம் விநியோகித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக்கூறி, (இன்று) 04.07.2025 இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related Articles