முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
  • :

கைது செய்வதற்கான உத்தரவு  (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது, இதனால் அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அவருக்கு கைது செய்வதற்கான உத்தரவு  (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, வழக்கு எண் 6314/23 இன் கீழ், கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா உள்ளிட்ட 08 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]