நகர அபிவிருத்தியின் கீழ் மேற்கொள்ளப்படும் CITY BRANDING திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் நகர நான்கு நகரங்கள் தெரிவு
நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் CITY BRANDING திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் அனுராதபுரம், கதிர்காமம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய நகர அடையாளச் சின்னமாக்கல் செயற்திட்டம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெறுகை நடைமுறையின்படி நான்கு ஆலோசனை நிறுவனங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளது டன, அப்பகுதிகளை ஆய்வு செய்து, சுற்றியுள்ள பகுதிகளின் குடியிருப்பாளர்கள் மற்றும் பிற நிருவாக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, ஒவ்வொரு நகரத்திற்கும் மேற்கொள்ளப்படவுள்ள அடையாளத் திட்டம் குறித்த தங்களது முதல் அறிக்கை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும், அமைச்சருமான எரங்க குணசேகரவின் தலைமையில் நேற்று (01) முதல் கலந்துரையாடப்பட்டது


