புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று 01 ஜூலை பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கை கடற்படையின் 27ஆவது தளபதியாக பதவியேற்ற பின்னர், பாதுகாப்பு செயலாளருடன் வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இதுவாகும்.
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதியை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர், அவருக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொழில்முறைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் மூலோபாயத் தொலைநோக்குப் பார்வையுடன் இலங்கை கடற்படைக்கு தலைமைத்துவம் வழங்கி, அதன் செயற்பாட்டு சிறப்பையும் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் மேலும் வலுப்படுத்துவார் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ, கடந்த ஜூன் 30ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


