பேரூந்துக் கட்டணங்களைத் திருத்தம் செய்தல் தொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி

பேரூந்துக் கட்டணங்களைத் திருத்தம் செய்தல் தொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி
  • :
தற்போது நடைமுறையிலுள்ள பஸ் கட்டணக் கொள்கைக்கு இணங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 01 ஆம் திகதி பேரூந்துக் கட்டணத் திருத்தம் வெளியிடப்பட வேண்டும்.

 அதற்கமைய, 2026 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வருகின்ற போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற தளம்பல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பேரூந்து இயக்கச் செலவுகள், தற்போது பயன்படுத்தப்படும் பேரூந்து உதிரிப்பாகங்கள், அமெரிக்க டொலரில் ஏற்பட்டுள்ள தளம்பல்களால் பேரூந்து உதிரிப் பாகங்களின் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்குகின்ற பேரூந்துகள் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாழ்மிதிபலகை கொண்ட லங்கா மெட்றோ ரான்ஸ்சிற் பிறைவெட் லிமிட்டட் இன் கீழ் இயங்குகின்ற பேருந்துகள் போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதற்காகவும் மற்றும் பேரூந்து தொழிற்றுறையைப் பாதுகாப்பதையும் கருத்தில் கொண்டு, தற்போது காணப்படுகின்ற பேரூந்துக் கட்டண சூத்திரம் (செலவுச் சுட்டி) மற்றும் கட்டணக் கட்டமைப்பை இற்றைப்படுத்தல், திருத்தம் செய்வதற்கான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதப்புரைகளுக்கமைய, 2026.06.30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டணத்தைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles