2025 பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரை மற்றும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்மாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் உள்ள கடல் பிராந்தியத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற் பிரதேசத்தில் பிரதானமாக மழையுடனான காலநிலை காணப்படும்.
காற்று
கிழக்குக் கரையில் இருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாளத்திற்கு கிலோமீட்டர் 25 தொடக்கம் 35 வரை காணப்படும்.
நீர் கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசத்தின் கடற் பிராந்தியத்தில் வீசும் காற்று அடிக்கடி மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் அதிகரிக்கலாம்.
கடல் நிலை
நீர் கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் காலியில் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் அடிக்கடி கடும் கொந்தளிப்பு காணப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.