நாட்டின் மனித வளங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு மற்றும் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் மனித வளங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு  மற்றும் முன்னேற்றுவதற்கு   அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
  • :

தற்காலத்தில் நாட்டிற்கு மிகவும் பெறுமதியான வளமாக மனித வளம் காணப்படுவதாகவும், அந்த மனித வளத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம் பெற்ற வருடாந்த டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார்.

 

இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று (29) இந்த டிப்ளோமா பட்டமளிப்பு விழா இடம்பெற்றதுடன், கல்லூரியின் 18 உயர்தேசிய டிப்ளோமா மற்றும் தேசிய டிப்ளோமா பாடநறிகளைப் பூர்த்தி செய்த 516 மாணவர்களுக்கு இதன் போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் கரங்களினால் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் எஸ். எம். சமன் சமரக்கோன், விரிவுரையாளர்கள் குழாம் மற்றும் டிப்ளோமாதாரிகள், அவர்களின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக

அமைச்சு

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]